கடந்த நிதி ஆண்டில் மாருதி விற்பனையில் வீழ்ச்சி

கடந்த 2010-11ம் நிதிஆண்டில் மாருதி நிறுவனம் மொத்தம் 12,71,005 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், சென்ற நிதி ஆண்டில் அந்த நிறுவனத்தால் 11,33,695 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.
பெட்ரோல் விலை உயர்வு, தொழிலாளர் வேலை நிறுத்தம், கார் கடன் வட்டி உயர்வு ஆகியவை மாருதியின் விற்பனை வீழ்ச்சிக்கு வித்திட்ட காரணங்கள். இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் விற்பனை மீண்டும் எழுச்சி பெறும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.
புதிய டிசையர் கார் விற்பனை அமோகம்:
கடந்த மாதம் ஸ்விப்ட் டிசையர் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் 10,278 டிசையர் கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 16,451 டிசையர் கார்களை விற்பனை செய்திருக்கிறது. டிசையரின் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை, சிறிய கார்கள் செக்மென்ட்டில் உள்ள மாருதி-800,ஆல்ட்டோ, ஏ-ஸ்டார், வேகன்-ஆர் கார்களின் மொத்த விற்பனையில் மாருதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஆண்டு மார்ச்சில் இந்த செக்மென்ட்டில் மட்டும் 58,799 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 52,826 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இதனால், விற்பனை 10 சதவீதத்திற்கும் மேல் சரிவு கண்டு சிறிய கார்கள் பங்களிப்பை கொடுக்காமல் ஏமாற்றின.


Click it and Unblock the Notifications








