பெங்களூரில் மாருதி ஸ்டாக்யார்டு: ஸ்விப்ட் கார் காத்திருப்பு காலம் குறையும்

மாருதியின் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக ஸ்விப்ட் மற்றும் ஸ்விப்ட் டிசையர் இருக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த இரண்டு கார்களின் காத்திருப்பு காலம் 4 முதல் 6 மாதங்கள் வரை இருக்கிறது.
இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சலிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்த 2 கார்கள் உள்பட தனது அனைத்து கார் மாடல்களின் காத்திருப்பு காலத்தை குறைக்க மாருதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பெங்களூர் மற்றும் நாக்பூரில் கார்களை அதிகளவு ஸ்டாக் வைக்கும் வகையில், பிரம்மாண்ட ஸ்டாக்யார்டுகளை மாருதி கட்டுகிறது. இதனால், தனது அனைத்து கார்களின் காத்திருப்பு காலம் அதிகபட்சம் 2 மாதங்களை தாண்டாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் கட்டப்படும் புதிய ஸ்டாக்யார்டு மூலம் தென்மாநில வாடிக்கையாளர்களுக்கு கார்கள் 2 மாதங்களுக்குள் டெலிவிரி கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்டாக்யார்டுகள் மூலம் தனது விற்பனையும் கணிசமாக அதிகரிக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








