கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனை 20 சதவீதம் உயர்வு

கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதனால், அந்த நிறுவனம் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

பெட்ரோல் விலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றின் தாக்கங்களால் கார் விற்பனை கடும் சரிவு கண்டு வருகிறது. பெட்ரோல் கார் விற்பனையை நம்பியிருக்கும் மாருதியின் விற்பனையும் சரிவு கண்டு வந்தது.

Maruti Dzire

இந்த நிலையில், கடந்த மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை மாருதி பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 80,297 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 96,597 கார்களை விற்பனை செய்துள்ளது.

இது 20.3 சதவீதம் கூடுதலாகும். மேலும், உள்நாட்டில் மட்டும் 83,531 கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஏற்றுமதியும் நன்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. கடந்த மாதம் 13,066 கார்களை ஏற்றுமதி செய்து 27.13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

எம்-800, ஆல்ட்டோ, ஏ-ஸ்டார், வேகன்-ஆர் உள்ளடக்கிய சிறிய கார் செக்மென்ட் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், ஸ்விப்ட், ரிட்ஸ் ஆகிய கார்களின் விற்பனை 39.32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டு வெறும் 2,486 டிசையர் கார்களை விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம் கடந்த மாதம் 13,741 கார்களை விற்பனை செய்து காலரை தூக்கிவிட்டுக் கொண்டுள்ளது.

சிறிய கார்கள் விற்பனை காலை வாரிய போதிலும், டிசையர் காரின் விற்பனை 5 மடங்கு அதிகரித்து அந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு தோள் கொடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 2, 2012, 15:47 [IST]
English summary
India's leading car maker, Maruti Suzuki on Monday reported a growth of 20.30 per cent in total sales at 96,597 units in the month of June. The car maker had sold 80,298 units in the same month last year, Maruti Suzuki said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+