புதிய கார் ஆலைக்காக குஜராத் அரசுடன் விரைவில் மாருதி ஒப்பந்தம்

நாட்டில் மொத்த கார் உற்பத்தியில் பாதி பங்களிப்பை மாருதி நிறுவனம் கொண்டிருக்கிறது. டெல்லி அருகே குர்கான் மற்றும் மானேசரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், எதிர்கால தேவையை நிறைவு செய்யும் வகையிலும், ஏற்றுமதியை கருத்தில்க்கொண்டும் குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்கு மாருதி முடிவு செய்தது.
இதற்காக, நிலம் தேர்வு செய்யும் பணிகள் எல்லாம் தற்போது நிறைவடைந்துவிட்டது. புதிய ஆலை கட்டுவதற்காக 500 ஏக்கர் நிலத்தை குஜராத் அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், புதிய ஆலை கட்டுவதற்காக குஜராத் அரசுடன் வரும் ஜூன் 2ந் தேதி மாருதி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆலை கட்டும் பணிகளை மாருதி துவங்கும். புதிய ஆலைக்காக ரூ.6,000 கோடி வரை முதலீடு செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. தவிர, ஆலையை தொடர்ந்து தேவைக்கு தக்கவாறு விரிவாக்கம் செய்வதற்காக கூடுதல் முதலீடு செய்ய
முதலில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக கட்டப்பட உள்ள இந்த புதிய ஆலை படிப்படியாக உற்பத்தி திறன் கூட்டப்பட்டு ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை உற்பத்தி திறன் கொண்டதாக மாற்ற மாருதி முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








