ஹரியானாவில் மாருதியின் பிரம்மாண்ட டிரைவிங் பயற்சி பள்ளி திறப்பு

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம், முறையான கார் டிரைவிங் பயற்சி வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, நாடு முழுவதும் 200 டிரைவிங் பயற்சி பள்ளிகளை நடத்தி வருகிறது.
இநத் நிலையில், தற்போது ஹரியானா மாநிலம், ரோத்டாக் நகரில் பிரம்மாண்ட டிரைவிங் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிரைவிங் ஆராய்ச்சி மையத்தில் டிரைவிங் தொடர்பான விதிமுறைகளை கற்றுத்தருவதற்கான 6 வகுப்பறைகள், இரண்டு டிரைவிங் ஸ்டிமூலேட்டர் எந்திரங்கள், 1.8 கிமீ நீளம் கொண்ட டிரைவிங் ட்ராக் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, பயிற்சிக்காக 6 கார்கள் மற்றும் 2 பஸ்கள், நூலகம், ஆய்வகம் என அனைத்து வசதிகளுடன் உலகத் தரத்தில் இந்த ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் ஆண்டுக்கு 20,000 பேருக்கு முறையான டிரைவிங் பயற்சி வழங்க உள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.
மேலும், வர்த்தக வாகனங்களை ஓட்டுவதற்கு, ஓட்டுனர் பயற்சி பெறும் பழகுனர்களுக்கு, போலீசாருக்கான ஸ்பெஷல் டிரைவிங், ஆட்டோ டிரைவர்களுக்கு என தனித்தனியாக பயற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








