ஆல்ட்டோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ஸ்விப்ட்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் புக்கிங்கில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஒரு லட்சம் என்ற இமாலய புக்கிங் எண்ணிக்கையை பெற்றது.
ஆனால், பல்வேறு பிரச்னைகளால் ஸ்விப்ட் காத்திருப்பு காலம் 7 முதல் 9 மாதங்கள் வரை நீண்டது. இந்த நிலையில், ஸ்விப்ட்டின் காத்திருப்பு காலம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், விற்பனையில் புதிய அத்யாயத்தை ஸ்விப்ட் எழுதியுள்ளது. கடந்த 87 மாதங்களாக நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருந்த ஆல்ட்டோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ஸ்விப்ட்.
கடந்த மாதம் 17842 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. ஆனால், ஸ்விப்ட் கார்களின் விற்பனை 19484 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தது. இதனால், ஆல்ட்டோவின் ஆதிக்கத்தை ஸ்விப்ட் கடந்த மாதம் முடிவுக்கு கொண்டு வந்தது.
விற்பனையாகும் மொத்த ஸ்விப்ட் கார்களில் 80 சதவீதம் டீசல் மாடல். ஆனால், ஆல்ட்டோவில் டீசல் மாடல் இல்லாததே விற்பனையில் பின்தங்கியதற்கு காரணமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications