zபுது ஸ்விப்ட்டில் பிரேக் கோளாறா?- மாருதிக்கு அடுத்த தலைவலி!

இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் கார் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. குறைந்த வேகத்தில் செல்லும்போது சரியாக பிரேக் பிடிக்கவில்லை என்பதே அந்த புகார். ஆட்டோமொபைல் தளம் ஒன்றின் கருத்து பரிமாற்ற பகுதியில் இந்த புகாரை புதிய ஸ்விப்ட் உரிமையாளர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.
நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மெதுவாக செல்லும்போது, குண்டும் குழியுமான சாலையில் குறைந்த வேகத்தில் செல்லும்போதும் சரியாக பிரேக் பிடிப்பதில்லை என்பதே புதிய ஸ்விப்ட் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்.
இதுதொடர்பாக, எழுந்த புகார்கள் குறி்தது அந்த இணையதளம் மாருதியை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் இல்லையாம். மேலும், அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் விற்பனையில் ஏதாவது ஏடாகுடத்தை ஏற்படுத்திவிடுமோ என்று மாருதி கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.
பல பிரச்னையில் சிக்கி தவிக்கும் மாருதிக்கு ஸ்விப்ட் ஆறுதலான விஷயமாக இருந்து வருகிறது. மேலும், மாருதியின் பிராண்டு மதிப்பை காப்பாற்றி வருவதில் ஸ்விப்ட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் மீது எழுந்துள்ள புகார் மாருதிக்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1ந் தேதி முதல் கார்களில் ஏதெனும் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டால் கார் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிடும் என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) அறிவித்தது.
இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் கார் மீது எழுந்துள்ள புகாருக்கு மாருதி சரியான பதில் தராதது ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி வாடிக்கையாளர் மத்தியிலும் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








