ஸ்விப்ட் ஸ்டாக் தீர்கிறது.. கவலையில் வாடிக்கையாளர்: என்ன செய்யப் போகிறது மாருதி?

மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் ஸ்விப்ட் மற்றும் டிசையர். இந்த இரண்டு கார்களும் மாருதியின் மானேசர் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மானேசர் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால், ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக ஆலையை திறக்கும் சூழ்நிலை இல்லாததால், அந்த இரு கார்களின் வெயிட்டிங் பீரியட் கால வரையின்றி நீளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஸ்டாக்யார்டு மற்றும் டீலர்களில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் இருப்பு விரைவில் தீர்ந்துவிடும் நிலை இருக்கிறது. இதனால், இந்த இரண்டு கார்களின் டெலிவிரி முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு 3 முதல் 4 மாதங்கள் காத்திருந்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் கார் எப்போது டெலிவிரி கிடைக்கும் என்று தெரியாமல் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஸ்விப்ட், டிசையர் கார்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிலைமை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக மாருதி டீலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கண்டு விரைவில் ஆலையில் உற்பத்தியை துவங்க மாருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் டீலர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர். என்ன செய்யப் போகிறது மாருதி? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








