மாருதி ஸ்விப்ட்டுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பு விருது

ஆட்டோமொபைல் துறையில் சிறந்த வடிவமைப்பு கொண்ட கார்கள், பைக்குகளை தேர்வு செய்து இந்திய வடிவமைப்பு கவுன்சில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது சிறந்த வடிவமைப்புக்கான மார்க்-1 விருதை மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான ஸ்விப்ட் மற்றும் வேகன்-ஆர் கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு, தரம், கையாளுமை என அனைத்து பிரிவுகளிலும் ஸ்விப்ட் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதேபோன்று, வேகன்-ஆர் காரும் மாருதி நிறுவனத்தின் விற்பனையில் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை பெற்றது.
இந்த இரண்டு கார்களுக்கும் கிடைத்துள்ள விருது பெருமகிழ்ச்சி அளிப்பதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த விருதுக்கு கார்கள், பைக்குகள் தேர்வு செய்யப்படுகின்றன.
மார்க்-1 என்ற முதல் தர நிலை கொண்ட இந்த விருதுகள் நிச்சயம் அந்த கார்கள், பைக்குகள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துவதாக இருக்கும் என்பதால், விற்பனையில் மிக முக்கிய தாக்க்ததை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications