மாருதிக்கு திண்டாட்டம், ஹூண்டாய்க்கு கொண்டாட்டம்...!!

Maruti Swift
மாருதி கார் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, தங்களது கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

கார் மார்க்கெட்டில் 50 சதவீத அளவுக்கு பங்களிப்பை கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மானேசர் ஆலையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் தற்போது ஸ்விப்ட், டிசையர் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கார் மாடல்களும்தான் தற்போது மாருதி விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், டீலர்களில் இந்த இரண்டு கார்களின் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும், தற்போது 55,000 கார்களையும், 65,000 டிசையர் கார்களையும் டெலிவிரி கொடுக்க வேண்டிய நிலையில் மாருதி இருக்கிறது. உற்பத்தி உடனடியாக துவங்கினால் கூட மேற்கண்ட புக்கிங் செய்யப்பட்ட கார்களை டெலிவிரி கொடுத்து முடிக்க 5 மாதங்கள் பிடிக்கும்.

இந்த நிலையில், உற்பத்தி மீண்டும் எப்போது துவங்கும் என்று தெரியாத நிலையில், இந்த இரண்டு கார்களின் வெயிட்டிங் பீரியட் காலவரையின்றி நீண்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு கவனத்தை திசை திருப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாருதியின் விற்பனையில் பெரும் அடி விழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாருதிக்கு ஏற்பட்டுள்ள உற்பத்தி நெருக்கடி, போட்டியாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஐ20 மற்றும் வெர்னா கார்களின் விற்பனையை அதிகரிக்குமாறு மாருதிக்கு நேரடி போட்டியாளரான ஹூண்டாய் டீலர்களுக்கு ரகசிய கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

போலோ, வென்ட்டோ கார்களின் விற்பனையை அதிகரிக்குமாறு போக்ஸ்வேகனும் டீலர்களை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று ஃபோர்டு, ஸ்கோடா, நிசான் என அனைத்து கார் நிறுவனங்களும் மாருதியின் நெருக்கடியை பயன்படுத்தி கார் விற்பனையை அதிகரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டும் மானேசர் ஆலையில் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஸ்விப்ட் கார் உற்பத்தி பெரும் பாதிப்படைந்தது. அப்போது, ஹூண்டாய் உள்ளிட்ட கார் நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்தது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 25, 2012, 10:02 [IST]
English summary
Maruti Suzuki's close rival Hyundai has written to its dealers to "push" and "increase" sales of i20 compact as competitors look to gain from the lockout at the top car maker's Manesar plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+