ரூ.2 லட்சத்தில் வேலை வாய்ப்பு என மாருதி பெயரில் போலி இமெயில்கள்!

ரூ.2 லட்சத்தில் சம்பளம் என மாருதி பெயரில் நூற்றுக்கணக்கானோருக்கு போலி வேலைவாய்ப்பு இமெயில்கள் அனுப்பி நூதன மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இதை நம்பி மோசம் போக வேண்டாம் என மாருதி கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக திகழும் மாருதி பெயரில் போலி இமெயில்கள் அனுப்பி மோசடி செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக, மாருதி இணையதளத்திலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு கும்பல் மாருதி பெயரில் போலி வேலைவாய்ப்பு இமெயில்களை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானேசரில் உள்ள மாருதியின் புதிய ஆலையில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், ரூ.62,000 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் நூற்றுக்கணக்கானோருக்கு போலி இமெயில்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலையில் சேர வேண்டுமானால் கடந்த 10ந் தேதிக்குள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் ரூ.14,350 டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.

மேலும், வேலை கிடைக்காவிட்டால் வங்கி வரவு செலவுக்காக ரூ.350 மட்டும் பிடித்தம் செய்துகொண்டு மீதமுள்ள ரூ.14,000ஐ திருப்பித் தரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போலி வேலைவாய்ப்பு இமெயில்கள் குறித்து தகவல் அறிந்து கொண்ட மாருதி நிர்வாகம் உடனடியாக அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற போலி இமெயில்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மோசடிகளை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 12, 2012, 11:58 [IST]
English summary
Maruti Suzuki has warned job seekers about a network of criminals who are sending out fake emails offering jobs in the car manufacturer.Maruti Suzuki gave this warning after several people were duped of lakhs by those offering these jobs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+