கிசாஷிக்கு 3 லட்சம் தள்ளுபடி: மாருதியின் அதிரடி முடிவு

By Saravana
Kizashi
பண்டிகை கால சலுகையாக கிசாஷி பிரிமியம் காருக்கு விலையில் 3.12 லட்சம் தள்ளுபடி சலுகையை வழங்க மாருதி முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட கிசாஷி மாருதியின் தேறாத கேஸ்களில் ஒன்று. நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் இதுவரை மொத்தம் 157 கிசாஷி கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

ரூ.17.12 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் கிசாஷியின் விலைதான் அந்த காரிடம் வாடிக்கையாளர்களை நெருங்க விடுவதில்லை. இந்த கார் இறககுமதி செய்து விற்கப்படுவதால் 105 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் விலை அதிகமிருக்கிறது. போட்டியாளர்களுடன் முண்டியடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் கிசாஷி விலையில் 3.12 லட்சம் தள்ளுபடி சலுகையை வழங்க மாருதி முடிவு செய்துள்ளது. இதனால், கிசாஷியின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் விலை ரூ.14 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ.15 லட்சமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சலுகை மூலம் கிசாஷி விற்பனை அதிகரித்தால், உள்நாட்டிலேயே இந்த காரை தயாரிக்கவும் மாருதி திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த தள்ளுபடி சலுகைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று மாருதி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Saturday, September 15, 2012, 15:31 [IST]
English summary
Maruti is planning to offer a huge Rs. 3.12 lakhs discount on the D+ premium sedan Kizashi, which was introduced in India as a fully imported unit in February 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+