5 மடங்கு ஊதியத்தை உயர்த்தி தர மாருதி தொழிலாளர்கள் கோரிக்கை

ஹரியானா மாநிலம், மானேசரில் மாருதியின் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த ஆலையில் ஸ்விப்ட், டிசையர் உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்த ஆலையை சேர்ந்த தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டாத்தால் கார் உற்பத்தி பெரும் பாதிப்படைந்தது.
ரூ.450 கோடி அளவுக்கு மாருதிக்கு இழப்பு ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட்டுக்கு புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மானேசர் ஆலையை சேர்ந்த புதிய தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 கோரிக்கைகளை அமல்படுத்த மாருதி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில், பிற கார் நிறுவனங்களை விட மாருதி ஆலையில்தான் ஊதியம் குறைவாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டி, அடுத்த மூன்றாண்டுகளுக்கான ஊதிய உயர்வை 5 மடங்கு உயர்த்தித் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால், மாருதி நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகளை மாருதி ஏற்காவிடில் மீண்டும் ஒரு வேலை நிறுத்த்பபோராட்டத்தை சந்திக்க நேரிடலாம் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன. எனவே, அதிக டிமான்ட் கொண்ட காரான ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








