பெட்ரோல் விலை உயர்வால் கலகலத்த கார் மார்க்கெட்

ரூபாய் மதிப்பு சரிவு, பெட்ரோல் விலை உள்ளிட்ட காரணிகள் கார் மார்க்கெட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கார்களின் விலையும் அடிக்கடி உயர்த்தப்படுவது வாடிக்கையாளர் மனதில் கார் கனவை கலைத்து வருகிறது.
இதனால், கார் விற்பனை மந்தகதியில் செல்கிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த மாதம் கார் விற்பனை குறைந்துவிட்டது.
கடந்த 2011ல் மொத்தம் 1,58,809 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 1,63,229 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெறும் 2.78 சதவீத வளர்ச்சி மட்டுமே பதிவு செய்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வே கடந்த மாதம் கார் விற்பனை மந்தமடைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டில் கார் விற்பனை சியாம் நிர்ணயித்த 10 முதல் 12 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையால் கார் விற்பனை மந்தமடைந்துள்ளதால், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








