புதிய எஸ்யூவியை ரகசியமாக சோதனை செய்து வரும் மஸ்தா

Mazda CX5
ஜப்பானை சேர்ந்த மஸ்தா நிறுவனம் தனது சிஎக்ஸ் கிராஸ் ஓவர் எஸ்யூவியை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. குர்கானில் சோதனை நடத்தப்பட்டபோது சிஎக்ஸ்-5 எஸ்யூவி கேமரா கண்ணில் இந்த புதிய எஸ்யூவி சிக்கியுள்ளது.

ஸ்வராஜ் நிறுவனத்துடன் இணைந்து நீண்ட காலமாக மஸ்தா நிறுவனம் வர்த்தக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், முதன்முறையாக கார் மார்க்கெட்டில் அதுவும் தனியாக களமிறங்க உள்ளது.

முதலில் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய ஆலை கட்டுவதற்காக 1000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், தனது சிஎக்ஸ்5 கிராஸ்ஓவர் பிரிமியம் ரக எஸ்யூவியை டெல்லி அருகே குர்கானில் வைத்து சோதனை நடத்தியுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களிலும் இந்த எஸ்யூவி சோதனை நடத்த மஸ்தா திட்டமிட்டுள்ளது.

சர்வதேச மார்க்கெட்டில் இந்த சிஎக்ஸ்5 எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 155பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

இதேபோன்று, டீசல் மாடலில் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 147 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்த எஸ்யூவி மஸ்தாவின் ஸ்கைஆக்டிவ் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால், அதிக உறுதி மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 7, 2012, 10:46 [IST]
English summary
Japanese car maker Mazda, is testing of its CX5 premium SUV car in India. The company is planning to enter the Indian Premium suv car segment and was recently caught testing itsCX5 suv in Gurgaon near Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+