18ந் தேதி பி கிளாஸ் ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்தும் பென்ஸ்
வரும் 18 ந் தேதி முறைப்படி பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.
நாட்டின் அனைத்து முன்னணி நகரங்களிலும் பென்ஸ் பி கிளாஸ் பார்வைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் இந்த காரை நட்சத்திர தம்பதியரான ஸ்நேகா- பிரசன்னா ஜோடி அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், முறைப்படி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இந்த புதிய கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மும்பையில் நடைபெறும் விழாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், 122 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்த ஆண்டு டீசல் எஞ்சின் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பென்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








