பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்க பெனஸ் ஆயத்தம்

பிஎம்டபிள்யூவிடம் பறிகொடுத்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க மெர்சிடிஸ் பென்ஸ் அதி தீவிர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாடல் மெர்டிசிஸ் பென்ஸ் பி-கிளாஸ். பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் வரும் என்று தெரிகிறது.
இதில், டீசல் மாடலில் 136 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் சிஆர்டிஐ எஞ்சினும், 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் கொண்டிருக்கும்.
மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷன் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், பி-கிளாஸ் காரை இந்திய சாலை நிலை மற்றும் தட்ப வெப்பத்திற்கு தக்கவாறு மாற்றும் பணிகளில் தற்போது பென்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த கார் ரூ.20 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர பென்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








