ரூ.15 லட்சத்தில் வரும் பென்ஸ் கார் ரகசிய சோதனை

A Class
ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் இடையிலான விலையில் வரும் புதிய ஹேட்ச்பேக் காரை பென்ஸ் நிறுவனம் ரகசிய சோதனை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் இடத்திலிருந்து தற்போது மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டது மெர்சிடிஸ் பென்ஸ். மீண்டும் முதலிடத்தை பிடிப்பதற்காக குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.

குறைந்த விலை கார்கள் மூலம் தனது விற்பனையை வெகுவாக அதிகரித்துக் கொள்ளும் வகையில் குறைந்த விலையில் சிறிய சொகுசு கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. முதலாவதாக ரூ.25 லட்சத்திலான புதிய பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை இந்த மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ்.

ரூ.25 லட்சத்திற்குள் வரும் பென்ஸ் கார் என்பதால் பி கிளாஸ் மீது வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியுள்ளது. இது மட்டுமில்லாமல் அடுத்து ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் காரையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லி பதிவு எண் கொண்ட ஏ கிளாஸ் கார் அண்மையில் இந்திய மண்ணில் ரகசியமாக சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. டீம் பிஎச்பி இணையதளத்தில் ஏ கிளாஸ் கார் சோதனை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

எனவே, கூடிய விரைவில் ஏ கிளாஸ் இந்திய மார்க்கெட்டில் தடம் பதித்துவிடும் என கருதப்படுகிறது. இந்த புதிய கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்கும் இடையிலான விலையில் வரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 3, 2012, 10:24 [IST]
English summary
The A class, much awaited car from Mercedes Benz caught testing in Indian soil . The new car will be priced between INR 15 lakhs to 20 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+