அடுத்த இரு ஆண்டுகளில் 850 கோடியை முதலீடு செய்யும் பென்ஸ்

தனது குறைந்த விலை சொகுசு கார்களான பி கிளாஸ் மற்றும் ஏ கிளாஸ் கார்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார்களை உற்பத்தி செய்யும்போது பிற கார்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். இவற்றை தவிர்க்கும் வகையில் தனது உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள 100 ஏக்கர் பரப்பிலான தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
தவிர, சகன் தொழிற்சாலையிலேயே புதிய தொழில்நுட்பத்திலான பெயிண்டிங் பிரிவையும் துவங்க இருக்கிறது. இந்த புதிய திட்டங்களை செயல்படுத்தும் விதமாக வரும் 2014ம் ஆண்டிற்குள் ரூ.850 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறது. பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் பீட்டர் டி ஹோனேக் கூறுகையில்," இந்திய மார்க்கெட்டை மிக முக்கியமானதாக கருதுகிறோம். நீண்ட கால வர்த்தக நோக்குடன் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்து வருகிறோம்.
தற்போது இருக்கும் மாடல்கள் தவிர்த்து புதிய மாடல்களும் வர இருக்கிறது. எனவே, எங்களது உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம். வருங்காலத்தில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் அடுத்த இரு ஆண்டுகளில் 850 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறோம். இதன்மூலம், மார்க்கெட்டில் முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொள்வோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








