இந்திய கார் பிரிவு தலைவரை மாற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்

Peter Honegg
பிஎம்டபிள்யூவை தொடர்ந்து பென்ஸ் நிறுவனமும் இந்திய பிரிவு தலைவரை அதிரடியாக மாற்றுகிறது.

நம் நாட்டு மார்க்கெட்டில் நீண்ட கால வர்த்தக பாரம்பரியத்தை ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கொண்டிருக்கிறது. முதலிடத்தில் இருந்து வந்த பென்ஸை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மார்க்கெட்டில் கால் பதித்த பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனங்கள் படிப்படியாக மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிட்டுவிட்டன.

இந்த நிலையில், ஆடி நிறுவனத்தின் அசுர வேக வளர்ச்சி பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆடி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக இந்திய பிரிவு தலைவரை அதிரடியாக மாற்றி புதிய தலைவரை நியமித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இந்தியப் பிரிவு தலைவராக இருந்து வரும் பீட்டர் ஹொனேக்கை அதிரடியாக மாற்ற முடிவு செய்துள்ளது. சீனா மற்றும் மலேசிய மார்க்கெட்டுகளில் பென்ஸ் வளர்ச்சி பெறுவதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவக இருந்தவர் பீட்டர் ஹொனேக்.

மேலும், இந்தியாவில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கும் காரணமாக இருந்தவர். குறிப்பாக, சமீபத்தில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பி கிளாஸ் கார் அறிமுகப்படுத்தியதில் பீட்டர் ஹொனேக்குக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், ஆசிய சந்தையின் நெளிவு சுளிவுகளில் அத்துபடி என்பதால் ஏசியன் ஸ்பெலிஷ்ட்டாகவும் வர்ணிக்கப்படுபவர்.

இந்தநிலையில், ஆடியின் நெருக்கடியை சமாளித்து சந்தையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் விதமாக பீட்டர் ஹொனேக்கை ஜெர்மனியிலுள்ள டெய்ம்லர் ஏஜி தலைமை அலுவலகத்துக்கு திரும்ப பெற மெர்சிடிஸ் பென்ஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இந்திய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பீட்டர் ஹொனேக்கை பென்ஸ் மாற்றியுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய பிரிவு தலைவராக எபர்ஹார்டு கெர்ன் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. இவர் தற்போது தைவான் நாட்டு பென்ஸ் தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Monday, October 8, 2012, 10:36 [IST]
English summary
Mercedes-Benz India chief Peter Honegg will soon end his stint in India and will head to Daimler AG's head quarters in Germany. In a recent statement, Mercedes-Benz India has said Peter Honegg has decided to move to Germany.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+