எம் கிளாஸ் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரும் பென்ஸ்

போட்டியாளர்களால் முதல் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு நொந்து நூடுல்சாகியுள்ள பென்ஸ் நிறுவனம், தனது இடத்தை தக்கவைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த வரிசையில் தனது எம்எல் 350 சிடிஐ எஸ்யூவியை வரும் 15ந் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடுகிறது பென்ஸ். இந்த கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த காரில் 2987 சிசி திறன் கொண்ட வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 258 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் வல்லமை கொண்டது. மேலும், ஜி ட்ரானிக் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டதாக இந்த கார் வருகிறது.
அனைத்து சொகுசு வசதிகள், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த கார் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரிமியம் எஸ்யூவி புதியதோர் அனுபவத்தை தரும் என்கிறது பென்ஸ்.
இந்த காரை தொடர்ந்து, எம்எல் 250 மற்றும் ஏஜி 63 ஆகிய கார் மாடல்களையும் அடுத்த ஓர் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர பென்ஸ் திட்டமிட்டுள்ளது. எம் கிளாஸ் எஸ்யூவி ரூ.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








