இந்தியாவில் மிகப் பெரிய கார் சர்வீஸ் மையம் திறந்த பென்ஸ்!

சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், மும்பை அந்தேரியில் மிகப் பிரம்மாண்டமான சொகுசு கார் சர்வீஸ் மையத்தை திறந்துள்ளது.
ஒரு லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த சர்வீஸ் மையத்தில் ஒரே நேரத்தில் 54 கார்களை சர்வீஸ் செய்ய முடியும். இந்த சர்வீஸ் மையத்தை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சிஇஓ பீட்டர் ஹொனேக் திறந்து வைத்தார்.
உலகத் தரம் வாய்ந்த அம்சங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த சர்வீஸ் மையத்தில் பழுது நீக்குதல், கார் வாஷ், பாலிஷ். டயர்கள் மாற்றுதல், வீல் பேலன்சிங் மற்றும் பெயிண்டிங் என அனைத்து விதமான பணிகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் இயங்கும் இந்த பணிமனையில் அனுபவம் வாய்ந்த 155 பணியாளர்கள் சிறப்பான சேவையை வழங்குவர் என பென்ஸ் தெரிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மும்பை டீலரான ஆட்டோ ஹேங்கர் நிறுவனம்தான் இந்த சர்வீஸ் மையத்தை ரூ.52 கோடி செலவில் கட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








