ரூ.12 லட்சத்தில் புதிய பிராண்டில் கார்களை அறிமுகப்படுத்தும் பென்ஸ்

இந்தியாவில் ஸ்மார்ட் கார் பிராண்டை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், ரூ.12 லட்சத்திலேயே பென்ஸ் கார்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இழந்த முதல் இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் அதன்மூலம் போட்டி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் மினி பிராண்டை அறிமுகம் செய்தது போன்று தனது ஸ்மார்ட் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில் ஸ்மார்ட் பிராண்டில் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சர்வதேச கூட்டணி நிறுவனங்களான ரினால்ட்-நிசான் ஒத்துழைப்புடன் ஸ்மார்ட் பிராண்டு கார்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் பென்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது இதற்கான சாதக பாதக அம்சங்களை பென்ஸ் ஆராய்ந்து வருகிறது.

மேலும், தனது பிராண்டு மதிப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக நிசான் நிறுவனம் சமீபத்தில் தனது தட்சன் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று, தனது பிராண்டு மதிப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக ஸ்மார்ட் கார் பிராண்டில் குறைந்த விலை கார் மாடல்களை அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 26, 2012, 11:03 [IST]
English summary
German luxury car maker Mercedes benz planning to launch Smart car brand in India, reports said. The company conducted the possibilities of smart brand cars in Indian market recently. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+