கார் பந்தய வீரர் மைக்கேல் சூமேக்கரை சந்திக்க பென்ஸ் தரும் வாய்ப்பு!
கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மெர்சிடிஸ் அணியின் கார் பந்தய வீரர் மைக்கேல் சூமேக்கரை சந்திக்கும் அரிய வாய்ப்பை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் வழங்குகிறது. இதுதவிர, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்தை காணும் வாய்ப்பையும் கொடு்ப்பதாக தெரிவித்துள்ளது.

மார்க்கெட்டில் முன்னிலை பெறுவதற்கான நடவடிக்கைகளை மெர்சிடிஸ் பென்ஸ் படு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 15ந் தேதி வரை புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் தனது கார் பந்தய அணியின் வீரர் மைக்கேல் சூமேக்கரை சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
தவிர, காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்கள் 100 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாதம் 26ந் தேதி துவங்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்தை பிரதான அரங்கில் அமர்ந்து ரசிப்பதற்கான டிக்கெட்டையும் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 31 பென்ஸ் ஷோரூம்களில் இந்த சிறப்பு திட்டங்களை பெறலாம்.


Click it and Unblock the Notifications








