மினி ஜி வேகன் எஸ்யூவியை வடிவமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

அந்த வகையில், ஆடம்பரத்தையும், தனி அடையாளத்தையும் விரும்பும் பிரத்யேக வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு மினி ஜி வேகனை பென்ஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பழைய ஜி வேகன் எஸ்யூவி பார்ப்பதற்கு படு கவர்ச்சியாக இருக்காது. ஆனால், புதிய மினி ஜி வேகன் தோற்றத்தில் லேண்ட்ரோவர் எஸ்யூவி ரேஞ்சுக்கு அட்டகாசமாக இருக்கும் என்கின்றன இணைய வழி தகவல்கள்.
எக்ஸ்-156 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ஆடம்பர பேபி ஜி வேகன் காரை ஜிஎல்ஜி கிளாஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆடம்பர அம்சங்களை கொண்டிருந்தாலும் ஆஃப் ரோடு அம்சங்களையும் இந்த எஸ்யூவி கொண்டிருக்கும்.
ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கும் இந்த புதிய ஜி வேகன் பழைய கெலண்ட்வேகனை வடிவமைப்பில் ஒத்ததாக இருக்கும். மேலும், பென்ஸின் எம்எப்ஏ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட உள்ளது. பின்புற கதவில் ஸ்பேர் வீல், பம்பருடன் இணைந்த டேஞ்சர் லைட்டுகள், விங் டாப் இண்டிகேட்டர் என வடிவமைப்பில் அசத்தலாக இருக்கும் என்கிறது பென்ஸ் வட்டாரங்கள்.
122 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரலாம். இல்லையெனில், 156 பிஎச்பி அல்லது 211 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரலாம். டீசலை பொறுத்தவரையில் 1.8 லிட்டர் மற்றும் 2.1 லிட்டர் எஞ்சினுடன் வரலாம். ஏனெனில், இந்த எஸ்யூவிக்கு ஏராளமான எஞ்சினை பொருத்தும் வாய்ப்புகள் பென்ஸிடம் உள்ளன.
ஏஎம்ஜியின் நவீன தொழில்நுட்பம் கொண்ட பவர்ஃபுல் பிரேக்குகள், 4 வீல் டிரைவ் சிஸ்டம், 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவற்றுடன் பென்ஸ் மினி ஜி வேகன் மார்க்கெட்டுக்கு வர இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.


Click it and Unblock the Notifications








