கிராண்ட் எடிசன் ஜிஎல்-கிளாஸ் எஸ்யூவி: பென்ஸ் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனம் தனது சக நாட்டு சொகுசு கார் நிறுவனங்களால் இந்திய மார்க்கெட்டில் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. முதலிடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனமும், மூன்றாவது இடத்திலுள்ள ஆடி கார் நிறுவனமும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை கொடு்தது வருகின்றன.
இதைக்கருத்தில்க்கொண்டு, புதிய மாடல்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மெர்சிடிஸ் பென்ஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிஎல்-கிளாஸ் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஜிஎல்-கிளாஸ் கிராண்ட் எடிசன் எஸ்யூவியின் முன்பக்க கிரில்கள் முழுக்க முழுக்க புதியாக காட்சி தருகிறது. ஹெட்லைட்டுகளில் உட்புறம் கருப்பு நிற பூச்சு கொண்டிருப்பதால் அதிக கவர்ச்தியாக காட்சி தருகிறது.
இதேபோன்று, 20 இஞ்ச் அலாய் வீலும் நகரும் அரண்மனை தோற்றத்திற்கு உத்தரவாதம். உட்புறம் கருப்பு மற்றும் மெரூன் கலர்களில் பளிச்சிடுகிறது. கிராண்ட் எடிசன் முத்திரை சென்ட்ரல் கன்சோலில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆல் வீல் டிரைவ், ஏர் சஸ்பென்ஷன், டைரக்ட் ஸ்டீயரிங் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கும் குறைவில்லை.
புதிய ஜிஎல்-கிராண்ட் எடிசன் எஸ்யூவி 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், எக்ஸிகியூட்டிவ் வேரியண்ட் ரூ.60.9 லட்சத்திலும், லக்சுரி வேரியண்ட் ரூ.65.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








