ஜெனிவா மோட்டார் ஷோவில் பென்ஸ் ஏ கிளாஸ் கார் அறிமுகம்

சர்வதேச அளவில் பென்சின் என்ட்ரி லெவல் காராக இது விற்பனைக்கு வர இருப்பதால் இப்போதே இந்த கார் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அதைவிட குறைந்த விலையில் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் காரை பென்ஸ் அறிமுகம் செய்ய இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ் பென்சின் ப்ரன்ட் வீல் ஆர்க்கிடெக்சர் பிளாட்பார்மில் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. இந்திய மார்க்கெட்டுக்கு வர இருக்கும் ஆடி ஏ3 செடான் மற்றும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களுக்கு இந்த ஹெட்ச்பேக் கார் கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.
இந்த பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ரூ.20 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








