விரைவில் கார்களில் மைலேஜ் லேபிள்: மத்திய அரசின் புதிய சட்டம்

கார் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, இத்துறையை முறைப்படுத்தும் விதமாக பல கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, கார்களில் மைலேஜ் லேபிள்களை ஒட்டி விற்பனை செய்யும் முறையை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.
ப்ரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களின் மின்சிக்கனத்துக்கு தக்கவாறு தரவரிசை லேபிள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று, கார்களிலும் மைலேஜ் கொடுப்பதற்கு தக்கவாறு இந்த லேபிள்கள் ஒட்டப்படும்.
ஒவ்வொரு காரையும் சோதனை நடத்தி அரசாங்கம் தரும் மைலேஜ் சான்றுபடி, இந்த லேபிள்கள் ஒட்டப்படும். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு காரை பிற மாடல் கார்களுடன் ஒப்பிட்டு பார்த்து வாங்க முடியும்.
மேலும், வரும் 2015ம் ஆண்டுக்கு பின்னர் கார் வகைக்கு தக்கவாறு அரசு நிர்ணயிக்கும் அளவுக்கு மைலேஜ் கொடுக்கும் கார்களை மட்டுமே கார் நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியும். இதனால், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த கார்பன் புகை வெளியிடும் கார்களை வடிவமைத்து விற்பனை செய்ய முடியும்.
இதுதவிர, விதிமுறைகளை மீறும் கார் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மேலும், அனைத்து கார் நிறுவனங்களும் தங்களது கார் மாடல்களின் மைலேஜை அதிகபடுத்தவும், கார்பன் புகையை குறைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








