டெல்லியில் மினி பிராண்டு கார் ஷோரூம் திறப்பு!
டெல்லியில் மினி பிராண்டு கார்களுக்கான ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. வசந்த் கஞ்ச் பகுதியில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்டைலுக்கும், பெர்ஃபார்மென்சுக்கும் உலக அளவில் பெயர் பெற்றவை மினி பிராண்டு கார்கள். பிஎம்டபிள்யூ கீழ் இயங்கும் மினி பிராண்டு தற்போது இந்திய மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது கார்களை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் உடனடியாக புக்கிங்கும் துவங்கியது. மேலும், தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது தனது இரண்டாவது ஷோரூமை டெல்லியில் திறந்துள்ளது. டெல்லி டீலராக நியமிக்கப்பட்டுள்ள பேர்டு ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தான் இந்த ஷோரூமை திறந்துள்ளது.
5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமின் இரண்டு தளங்களிலும் 6 கார்களை பார்வைக்கு நிறுத்த முடியும்.
இதுதவிர,குர்கானில் சர்வீஸ் ஸ்டேஷனும் திறக்கப்பட்டுள்ளது. மினி கூப்பர், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள், மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் ஆகிய கார் மாடல்கள் இங்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








