கூடுதல் அம்சங்களுடன் புதிய மிட்சுபிஷி செடியா அறிமுகம்

செடியா செலக்ட் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய மாடலில் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்யும் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு டேப்லெட் ஒன்று கொடுக்கப்ப்படுகிறது. இந்த டேப்லெட்டில் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும்.
இந்த டேப்லெட்டை வின்ட் ஸ்கிரீனில் பொருத்திக் கொள்ளலாம். இதுதவிர, 6 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் கூடிய கென்வுட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டில்ட் அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங், கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம், பவர் விண்டோஸ், ட்வின் ஏர்பேக், அட்ஜெஸ்ட்டபிள் இருக்கைகள், ஏபிஎஸ், இபிடி என எல்லா தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கிறது.
புதிய செடியா பெட்ரோல் மாடலில் மட்டும் கிடைக்கும். இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 113 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். அனைத்து விதங்களிலும் போட்டி போடும் அம்சங்கள் இருந்தும் சரியான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் டீசல் மாடல் இல்லாதது செடியாவை பின்தங்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








