ரெக்ஸ்டன் எஃபெக்ட்: பஜெரோ விலையை குறைத்த மிட்சுபிஷி!

சவாலான விலையில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா களமிறக்கியிருப்பது பல எஸ்யூவி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியை சமாளிக்கும் வகையில் பார்ச்சூனர் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்ததோடு மட்டுமின்றி விலையையும் குறைத்துள்ளது டொயோட்டா.
இதே வரிசையில் தற்போது பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் விலையை ரூ.1.87 லட்சம் குறைத்துள்ளது மிட்சுபிஷி-ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணி. இத்தோடு நில்லாமல் பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியை இனி பாகங்களாக இறக்குமதி செய்து உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய இருக்கிறது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.
இதனால், இறக்குமதி வரி கணிசமாக குறையும் என்பதால், தற்போது பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி விலை ரூ.22.86 லட்சம் விலையில் இனி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








