அடுத்த மாதம் புதிய பஜெரோ எஸ்யூவியை களமிறக்கும் மிட்சுபிஷி

இந்திய மார்க்கெட்டில் மிட்சுபிஷி பஜெரோ எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், டீலர் நெட்வொர்க் உள்ளிட்ட பிரச்னைகளால், பஜெரோ மீது ஆசையிருந்தாலும் வாங்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய பஜெரோ ஸ்போர்ட் மாடலை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் வரும் புதிய பஜெரோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று மிட்சுபிஷி அடித்து கூறுகிறது.
புதிய பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிளிங் செய்யப்பட உள்ளது. புதிய பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 135 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
டொயோட்டோ பார்ச்சூனர், ஹோண்டா சிஆர்வி, செவர்லே கேப்டிவா மற்றும் ரினால்ட் கோலியோஸ் ஆகிய பிரிமியம் எஸ்யூவிக்களுக்கு புதிய பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி கடும் போட்டியை கொடுக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








