ரூ.23.65 லட்சத்தில் புதிய பஜெரோவை விற்பனைக்கு கொண்டு வந்த மிட்சுபிஷி

கடந்த 1991ம் ஆண்டு பஜெரோ எஸ்யூவியை மிட்சுபிஷி விற்பனைக்கு கொண்டு வந்தது. அதுமுதல் பல லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது பஜெரோ. ஆனால், தற்போது டொயோட்டோ பார்ச்சூனர், ஹூண்டாய் சான்டா பீ உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களால் மிட்சுபிஷி பஜெரோ கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதையடுத்து, பஜெரோவை எஸ்யூவியை மிட்சுபிஷி மேம்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்ப வசதிகள், வடிவமைப்பில் புதிய மாற்றங்களுடன் பஜெரோ தற்போது புதுப் பொலிவு பெற்றுள்ளது. புதிய பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் இந்த எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 135 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். புதிய பஜெரோ 4 வீல் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கும்.
ஏபிஎஸ், ஏர்பேக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், இன்போடெயின்மென்ட் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பஜெரோ கிடைக்கும்.
புதிய பஜெரோவில் மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள், பார்க்கிங் சென்சார், கருப்பு மற்றும் பீயேஜ் வண்ணங்களில் உட்புற பினிஷ் ஆகியவையும் புதிய பஜெரோவுக்கு கூடுதல் பலமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








