தாய்லாந்தில் மிட்சுபிஷி மிராஜ் அறிமுகம்; அடுத்தது இந்தியாவுக்கா?

Mitsubishi Mirage
தாய்லாந்தில் எந்த ஒரு புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதற்கு அடுத்த அந்த கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், மிட்சுபிஷியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரான மிராஜ் ஹேட்ச்பேக் கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அடுத்தது இந்த கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்ற என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஆட்டோ ஷோவில் மிராஜ் என்ற பெயரில் புத்தம் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மிட்சுபிஷி அறிமுகம் செய்தது. வளர்ந்து வரும் மார்க்கெட்டுகளில் தனது விற்பனையை அதிகரிக்கும் வகையில், இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், தாய்லாந்தில் இந்த புதிய ஹேட்ச்பேக் காரை மிட்சுபிஷி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்தது இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி அறிமுக விழாவில் கலந்துகொண்ட கார்ப்பரேட் விவகாரங்களுக்கான பொதுமேலாளர் மசகிகோ யுகி மிராஜை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை சூசகமாக கூறியிருந்தார்.

புதிய மிராஜ் ஹேட்ச்பேக் காரில் 1.2 எம்பிஎப்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 77 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தற்போது மிராஜ் ஹேட்ச்பேக் கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்தியாவிலும் இரண்டு கியர் பாக்ஸ் மாடல்களிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3.8 லட்சம் முதல் ரூ.6.3 லட்சம் விலையில் மிராஜ் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, March 26, 2012, 15:23 [IST]
English summary
Mitsubishi, the Japanese carmaker has launched its Mirage Global small car in Thailand. The next stop for the Mirage could well be India as the company's Executive Officer and Corporate GM, Masahiko Ueki had expressed his interest to launch the global small car in India during the launch of the Pajero Sport.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+