7 பேர் செல்லும் வசதியுடன் புதிய அவுட்லேண்டர்: மிட்சுபிஷி அறிமுகம்

Mitsubishi Outlander
ரூ.19.95 லட்சத்தில் புதிய அவுட்லேண்டர் எஸ்யூவியை மிட்சுபிஷி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஷி இந்தியாவில் பழம்பெரும் கார் நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கார் விற்பனை செய்து வருகிறது.

கடந்த வாரம் புதிய பஜெரோ பிரிமியம் எஸ்யூவியை மிட்சுபிஷி விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய 7 சீட்டர் அவுட்லேண்டர் காரையும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்த புதிய அவுட்லேண்டர் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 5 சீட்டர் அவுட்லேண்டரை விட ரூ.1 லட்சம் கூடுதலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

5 சீட்டர் எஸ்யூவியின் பின்பக்கம் பொருட்கள் வைப்பதற்கான பகுதியில் சிறிய மாற்றம் செய்து 2 பயணிகள் கூடுதலாக செல்லும் வகையில் மாற்றியுள்ளது மிட்சுபிஷி.

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டரில் ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் ஸ்விட்சுகள், க்ரூஸ் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, எச்ஐடி ஹெட்லைட்டுகள், அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஹெட்ரெஸ்ட்டுகள், லெதர் இருக்கைகள் ஆகிய வசதிகள் இருக்கின்றன.

புதிய அவுட்லேண்டர் ஹோண்டா சிஆர்வி, ஃபோர்டு எண்டெவர் மற்றும் செவர்லே கேப்டிவா ஆகிய எஸ்யூவி கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 17, 2012, 11:32 [IST]
English summary
Mitsubishi India has launched the new 7-seater Outlander crossover at Rs. 19.95 lakh (ex-showroom, Delhi.). Less costlier by Rs. 1 lakh than the outgoing 5-seater Outlander, the new version is sure to take on the likes of Honda CR-V, Ford Endeavor and Chevrolet Captiva. T
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+