செடியாவின் விலையை அதிரடியாக ரூ.1.30 லட்சம் குறைத்த மிட்சுபிஷி

Mitsubishi Cedia
செடியா ஸ்போர்ட்ஸ் செடான் காரின் விலையை ரூ.1.30 லட்சம் வரை அதிரடியாக குறைத்துள்ளது மிட்சுபிஷி.

ராலி ரேஸ் பந்தயங்களில் புகழ்பெற்ற கார் மாடலாக மிட்சுபிஷியின் செடியா செடான் கார் திகழ்கிறது. மேலும், கார் பிரியர்களின் மத்தியில் வெகு பிரபலமான மாடலாகவும் இருக்கிறது.

இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வாயிலாக செடியா காரை மிட்சுபிஷி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதமாக செடியா காரின் விலையை ரூ.1.30 லட்சம் வரை அதிரடியாக குறைத்துள்ளது மிட்சுபிஷி.

டெல்லியில் ரூ.9.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த செடியா காரின் விலையை தற்போது ரூ.7.99 லட்சமாக குறைத்து அறிவித்துள்ளது மிட்சுபிஷி. இதனால், மிட் சைஸ் கார்களுக்கும் செடியாக கடும் போட்டியை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட செடியாவில் 115 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் இசிஐ மல்டி எனப்படும் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தும் மல்டி பாயின்ட் எரிபொருள் தொழில்நுட்பத்தை கொண்டது.

5 ஸ்பீடு கியர் பாக்ஸ், லெதர் இன்டிரியர், டச் ஸ்கிரீன் மியூசிக் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களை செடியா கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 3, 2012, 16:04 [IST]
English summary
Japanese car maker Mitsubishi has slashed Cedia sports car price up to Rs.1.30 lakhs. The Cedia is equipped with a 2.0 liter petrol engine and will out 115 PS Power. The sports car now available at unbelievable price at Rs.7.99 lakhs(Ex showroom in Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+