அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர்

Mitsubishi Outlander
ஜெனிவா மோட்டார் ஷோவில் அடுத்த தலைமுறைக்கான அம்சங்களுடன் புதிய அவுட்லேண்டர் கிராஸ்ஓவர் காரை மிட்சுபிஷி அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு அவுட்லேண்டர் கிராஸ்ஓவர் எஸ்யூவியை மிட்சுபிஷி உலக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து அம்சங்களிலும் சிறந்ததாக இருந்ததால் வாடிக்கையாளர் மத்தியில் தனி மதிப்பை பெற்ற மிட்சுபிஷி காராக மாறியது.

கடந்த ஆண்டு டிசம்பர் வரையில் உலக அளவில் 9.50 லட்சம் அவுட்லேண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையிலும், மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற வகையிலும் அவுட்லேண்டரை மேம்படுத்தியுள்ளது மிட்சுபிஷி.

இரண்டு தலைமுறைகளை கடந்து தற்போது மூன்றாம் தலைமுறையை கண்டுள்ளது. தற்போது மூன்றாம் தலைமுறை அவுட்லேண்டர் ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அம்சங்கள், அதிநவீன பாதுகாப்பு வசதிகள், சிறந்த கையாளுமை, அதிக பயன்பாடு கொண்ட வகையில் புதிய தலைமுறை அவுட்லேண்டர் மாற்றம் கண்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய அவுட்லேண்டரை விற்பனைக்கு கொண்டு வர மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 7, 2012, 14:39 [IST]
English summary
Eleven years after it first coined the term "crossover", Mitsubishi Motors Corporation (MMC) today unveils its third embodiment of this concept with the all-new next generation Outlander at the 82nd International Geneva Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+