பிரிட்டன் மீது படையெடுக்க சீன கார் நிறுவனங்கள் ஆயத்தம்!

Chinese Car
இங்கிலாந்தில் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த பல சீன நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீனாவின் கார் மாடல்கள் இங்கிலாந்து சாலைகளில் அடுத்தடுத்து தடம் பதிக்க உள்ளன.

இங்கிலாந்தில் ஜப்பானிய கார் நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த 1968ம் ஆண்டே தனது டட்சன் பிராண்டு மூலம் இங்கிலாந்தில் முதலாவதாக அடியெடுத்து வைத்தது நிசான். இதைத்தொடர்ந்து, டொயோட்டோ, ஹோண்டா ஆகியவை மார்க்கெட்டை பிடித்துக்கொண்டன.

இந்த வரிசையில் சீன நிறுவனங்கள் தற்போது இங்கிலாந்து மார்க்கெட்டில் களமிறங்க உள்ளன. கடந்த 2010ம் ஆண்டு கிரேட் வால் நிறுவனம் மட்டும் இங்கிலாந்து மார்க்கெட்டில் நுழைந்தது. ஸ்டீட் என்ற பிக்கப் டிரக்கை விற்பனை செய்து வருகிறது.

ஜப்பானிய நிறுவனங்கள் போன்று சீன நிறுவனங்கள் இங்கிலாந்து மார்க்கெட்டுக்குள் நுழைய முடியவில்லை. தர நிலைகளுக்கு ஏற்றாற்போல் சீன நிறுவனங்கள் கார்களை தயாரிக்க முடியாததால் இங்கிலாந்து மார்க்கெட்டுக்குள் செல்ல முடியவில்லை. ஆனால், தற்போது சீன கார் மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் முகாமி்ட்டதால், அங்கு கார் தொழில்நுட்பம் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதையடுத்து, பல சீன நிறுவனங்கள் தங்களது தர நிலைகளை மேம்படுத்தியுள்ளதால் நம்பிக்கையுடன் தற்போது தங்களது மலிவு விலை கார்களுடன் இங்கிலாந்தில் களமிறங்குகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரியில் கீலி நிறுவனம் புதிய செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன. இவை 10000 பவுண்டு விலையில் வரும் என்பதால் பிற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும். ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் புதிய காரை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மேலும், தற்போது ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தமாக இருப்பதால் மலிவு விலை கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி தங்களது தயாரிப்புகளை அங்கு முன்னிலைப்படுத்த சீன கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து சாலைகளில் சீன தயாரி்ப்புகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2012, 17:56 [IST]
English summary
More Chinese manufacturers are set to join Great Wall in the UK next year, including Geely, who underlined themselves as global players when they bought Volvo in 2010. They will launch the Focus-sized Emgrand saloon and hatchback in January, with prices starting at £10,000, followed by a new model every 12 months for five years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+