3 புதிய நகரங்களில் அமலுக்கு வந்த பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதி

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தடுக்கும் நோக்கில், குறைந்த கார்பன் புகையை வெளியிடும் தொழில்நுட்பத்துடன் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக மாசுக்கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.
நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் பாரத் ஸ்டேஜ் 3 விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாகன நெருக்கம் அதிகம் கொண்ட சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநகரங்களில் பாரத் ஸ்டேஜ்-4 விதி அமலில் உள்ளது.
பாரத் ஸ்டேஜ்-3 அளவீட்டின் படி புகையை வெளியிடும் வாகனங்கள் இந்த நகரங்களி்ல் விற்பனை செய்ய முடியாது. தற்போது நாட்டின் 17 முக்கிய நகரங்களில் பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதி அமலில் உள்ளது.
பாரத் ஸ்டேஜ் 4 மாசுக்கட்டுப்பாட்டு விதியை மாநகரங்கள் தவிர டயர்2 மற்றும் டயர் 3 என்று கூறப்படும் நகரங்களுக்கும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் 2015ம் ஆண்டுக்குள் 50 நகரங்களில் பிஎஸ்-4 விதியை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தற்போது 3 புதிய நகரங்களி்ல பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அன்கலேஷ்வர், ஹரியானாவிலுள்ள ஹிசார் மற்றும் ராஜஸ்தானிலுள்ள பாரத்பூர் ஆகிய 3 புதிய நகரங்களில் பிஎஸ்-4 அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கும் விரைவில் பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








