மும்பையில் அதிகம் திருடு போகும் கார்களின் லிஸ்ட்
கார் திருட்டை தடுக்க பல நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இருப்பினும், கார்கள் திருட்டு போவது தொடர் கதையாகி இருக்கிறது. அதிலும், குறிப்பிட்ட ரக கார்களை குறிவைத்து திருடும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கார்கள் திருட்டு தொடர்பாக மும்பை போலீசார் வெளியிட்டுள்ள விபரங்களில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோதான் திருடர்களின் முக்கிய இலக்காகி உள்ளது.
போலீசார் வெளியிட்ட தகவலில் அதிகம் திருடுபோன கார்களை ஸ்லைடரில் காணுங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கு பெயர் போன மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோதான் கடந்த ஆண்டு மும்பையில் அதிகம் திருடு போயுள்ளது. மொத்தம் 133 ஸ்கார்ப்பியோ கார்கள் கடந்த ஆண்டு திருட்டு போயுள்ளது.

மஹிந்திரா பொலிரோ
இரண்டாம் இடத்திலும் மஹிந்திரா தயாரிப்புதான். அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பொலிரோதான் கடந்த ஆண்டில் அதிகம் திருடுபோன கார் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்தம் 106 பொலிரோ வாகனங்கள் கடந்த ஆண்டு திருட்டு போயுள்ளது.

டாடா இன்டிகா இவி2
கடந்த ஆண்டு திருடு போன கார் பட்டியிலில் டாடா இன்டிகா இவி2 உள்ளது. மொத்தம் 67 இன்டிகா இவி 2 கார்கள் கடந்த ஆண்டு அபேஸாகியுள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ
ஹூண்டாய் சான்ட்ரோ கார்களும் அதிகம் திருடு போகும் கார் பட்டியலில் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு 106 சான்ட்ரோ கார்கள் திருடு போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

செவர்லே தவேரா
டொயோட்டா குவாலிஸ் முன்பு அதிகம் திருடுபோகும் கார் பட்டியிலில் இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை செவர்லே தவேரா பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மும்பையில் 106 செவர்லே தவேரா கார்கள் திருடு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 1,540 நான்கு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இருந்தும் வாடிக்கையாளர்களின் கவனக்குறைவால் அதிக கார்கள் திருடு போனதாக போலீசார் தெரிவித்தனர்.
எனவே, கார் திருட்டை தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர்களும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு கருவிகளை பொருத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








