ஏப்ரல் 1முதல் வாகன இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் உயர்கிறது
மூன்றாம் நபர் விபத்து காப்பீடு நிவாரணம் வழங்குவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், காப்பீட்டு நிறுவனங்களின் தொகுப்பு நிதியை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) அதிகரித்துள்ளது.
இதனால், இன்ஸ்யூரன்ஸ் கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்துகின்றன. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதில், வர்த்தக ரீதியில் இயக்கப்படும் வாகனங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். தற்போது கார்களுக்கு இருக்கும் மூன்றாம் நபர் விபத்துக் காப்பீட்டுக்கான கட்டணம் ரூ.880லிருந்து ரூ.925ஆக அதிகரிக்கிறது.
மூன்று சக்கர வர்த்தக வாகனங்களுக்கு தற்போது மூன்றாம் நபர் விபத்துக் காப்பீட்டுக்கான கட்டணம் ரூ.2,440 லிருந்து ரூ.3,415 ஆக உயரும். இதேபோன்று, டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இருக்கும் தற்போதைய கட்டணம் ரூ.8,420 லிருந்து ரூ.9,818ஆக உயரும்.
விபத்து காப்பீட்டு நிவாரணம் வழங்குவதால் ஏற்படும் நஷ்டம் தவிர, பணவீக்கம், நிர்வாக செலவீனம் ஆகியவற்றை கருத்தில்க்கொண்டு இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எங்களது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications









