வேலூரில் மை டிவிஎஸ் கார் சர்வீஸ் ஸ்டேஷன் திறப்பு!

MyTvs
கார் பழுது நீக்கும் சேவையை வழங்கி வரும் மைடிவிஎஸ் நிறுவனம் வேலூரில் தனது புதிய மையத்தை திறந்துள்ளது.

டிவிஎஸ் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் மை டிவிஎஸ் நிறுவனம் அனைத்து நிறுவனங்களின் கார்களையும் சர்வீஸ் செய்யும் வசதிகொண்ட கார் பழுது நீக்கும் மையங்களை திறந்து வருகிறது. மொத்தம் இதுவரை 25 பணிமனைகளை திறந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 11 கார் பழுது நீக்கும் மையங்கள் உள்ளன.

இந்த நிலையில், வேலூரில் தனது 26வது புதிய கார் பழுது நீக்கும் மையத்தை மைடிவிஎஸ் திறந்துள்ளது. ஆரணி சாலை, சாய்நாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய கார் பழுது நீக்கும் மையத்தில் அனைத்து பிராண்டு கார்களையும் பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி்றப்பு விழா சலுகையாக ரூ.199க்கு கார் வாஷ் மற்றும் பிரேக் க்ளீனிங் ஆகியவற்றை வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரூ.999 கட்டணம் கொண்ட திட்டத்தில் முழுமையான கார் பராமரிப்பை பெற முடியும்.

இதுகுறித்து டிவிஎஸ் ஆட்டோமோட்டிவ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவத்சன் கூறுகையில்,"நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் பராமரிப்பு மையம் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்கும்.

அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் மற்றும் எஞ்சினியர்களை கொண்டு கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் வசதியை வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க சேவையை வழங்கும். அடுத்த இரு ஆண்டுகளில் மைடிவிஎஸ் கார் சர்வீஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை 60ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 5, 2012, 14:04 [IST]
English summary
MyTVS, the popular brand of TVS Automobile Solutions Limited has inaugurated a new ‘All Car Services’ facility in Vellore recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+