நானோ விற்பனையை அதிகரிக்க புதிய யுக்திகள் தேவை: ரத்தன் டாடா

சலுகைகள், குறைந்த முன்பணம் மற்றும் நீண்ட கால தவணைகள் என கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்து நானோ கார் விற்பனையை ஓரளவு மேலே தூக்கியது டாடா மோட்டார்ஸ்.
கற்ற வித்தையையும் போட்டு காட்டியும் கடந்த மாதம் நானோ கார் விற்பனை திடீரென படுத்துக் கொண்டுள்ளது. இது டாடா மோட்டார்சை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் டாடா நானோ கார் விற்பனையை அதிரிக்க மீண்டும் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு சற்று காட்டமாகவே கூறியுள்ளார்.
நானோவை சிறந்த காராக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். நானோ விற்பனையை அதிகரிக்க அடுத்த கட்ட திட்டங்களை டாடா மோட்டார்ஸ் ஊழியர்கள் வகுத்து அந்த காரை வெற்றிகரமான மாடலாக மாற்ற வேண்டும்.
நானோ ஓர் சிறந்த குடும்ப கார் என்பதை அனைவருக்கும் அறிந்து கொள்ள புதிய யுக்திகளுடன் களமிறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.
நானோ கார் ரத்தன் டாடாவின் கனவு திட்டத்தில் உருவானதால் பிற கார்களை விட நானோ கார் மீது அவர் அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்த நிலையில், நானோ விற்பனை குறைந்ததை சரிகட்ட விரைந்து திட்டங்களை வகுத்து செயல்படுத்துமாறு ஊழியர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications