நானோ கார் பிளாப் மாடல் அல்ல: ரத்தன் டாடா

Tata Nano
"நானோ கார் பிளாப் மாடல் அல்ல," என்று டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு திட்டத்தில் உருவான நானோ கார் ஆரம்பத்தில் மார்க்கெட்டில் பெரிய அலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், தொடர்ந்து நானோ காரால் அந்த அலைகளை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், நானோ காரின் விற்பனை அதள பாதாளத்திற்கு சென்றது. இந்த நிலையில், நானோ காரின் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் தீவிர நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது.

சலுகைகள் மற்றும் கவர்ச்சியான நிதி உதவி திட்டங்களால் தற்போது நானோ காரின் விற்பனை நன்கு உயர்நது வருகிறது.

இதற்கிடையே, டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"நானோ கார் பிளாப் மாடல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மார்க்கெட்டிங் யுக்திகளை செயல்படுத்துவதில் சிறிது தவறுகளை செய்து விட்டோம். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பை வாய்ப்பை கோட்டை விட்டு விட்டோம்.

தற்போது அந்த தவறுகளை சரி செய்து நானோ காரின் விற்பனை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், நானோ கார் ஏழைகளின் கார் என்ற கருத்தையும் ஏற்க முடியாது. இது அனைத்து தரப்பு குடும்பத்தினருக்கும் ஏற்ற கச்சிசமான கார் என்பதையும் கூற விரும்புகிறேன்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, January 23, 2012, 11:23 [IST]
English summary
World's cheapest car Nano is not a poor man car, that is a affordable family car,says Ratan Tata. "In sum, I don't consider it to be a flop. I consider that we have wasted an early opportunity," he said
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+