ஜெயலலிதாவுடன் நரேன் கார்த்திகேயன் சந்திப்பு

Narain-Jayalalitha
முதல்வர் ஜெயலலிதாவை கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இன்று கோட்டையில் தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தமிழகத்தை சேர்ந்தவர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் முதல் தர கார் பந்தயங்களில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இந்த நிலையில், நரேன் கார்த்திகேயன் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தாக நரேன் கார்த்திகேயன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது நரேன் கார்த்திகேயன் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

சென்னையில் பார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் நரேன் கார்த்திகேயன் கோரியதாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 8, 2012, 16:15 [IST]
English summary
Indian Formula One motor racing driver Narayan Karthikeyan made a visit to Tamil Nadu Chief Minister J Jayalalithaa at her office in Chennai. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+