இதுவரை புதிய ஆல்ட்டோ 800 காருக்கு 21,200 பேர் முன்பதிவு
புதிய ஆல்ட்டோவுக்கு புக்கிங் குவிந்து வருகிறது. இதுவரை 21,200 பேர் புதிய ஆல்ட்டோ 800 காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
முற்றிலும் புதிய வடிவமைப்புடன் புத்தம் புது ஆல்ட்டோ காரை மாருதி கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ரூ.2.44 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்த புதிய ஆல்ட்டோ வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுகம் செய்யப்படும்போது கையில் 10,000 புக்கிங் என்ற தெம்போடு புதிய ஆல்ட்டோ 800 கார் மார்க்கெட்டுக்கு வந்தது. இந்த நிலையில், விற்பனைக்கு வந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இதுவரை புதிய ஆல்ட்டோ காருக்கு 21,200 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.
ஆல்ட்டோவுக்கு புக்கிங் குவிந்து வருவதால் உற்பத்தியை அதிகரிப்பது பற்றியும் மாருதி பரிசீலித்து வருகிறது. ஆல்ட்டோவின் வரிசை கார்களின் வெற்றியை புதிய ஆல்ட்டோவும் தொடர்ந்து தக்கவைக்கும் என மாருதி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








