புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங்

புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது அதன் பாதுகாப்பு அம்சங்களை சோதிக்கும் வகையில் கிராஷ் டெஸ்ட் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருக்கு பாதுகாப்பு தர சோதனை நடத்தப்பட்டது.
இதில், 6ம் தலைமுறையாக வந்திருக்கும் புதிய 3 சீரிஸ் காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்திருக்கிறது. பயணிகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பாதசாரிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் நிலை, கட்டுமான தரம் என தனித்தனியாக சோதனைகள் நடத்தப்பட்டன.
இவை அனைத்திலும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் அதிக புள்ளிகளை பெற்று இந்த மதிப்புமிக்க 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. மேலும், இந்த காரில் ஆப்ஷனலாக வழங்கப்படும் அவசர அழைப்பு தொழில்நுட்பமும் கணக்கில்கொள்ளப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு 3 சீரிஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பம் கார் விபத்தில் சிக்கினாலோ அல்லது அவசர சமயங்களில் தானியங்கி முறையில் போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அனுப்பும் என்பது இதன் சிறப்பு.
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஏற்கனவே நல்ல வரவேற்பைர கிடைத்துள்ள நிலையில், கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது அதன் மதிப்பையும், விற்பனையையும் உயர்த்தும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








