ஆகஸ்ட் 3ந் தேதி 3 சீரிஸ் காரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ

BMW 3 Series
அடுத்த மாதம் 3ந் தேதி தனது குறைந்த விலை 3 சீரிஸ் செடான் காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய கார் ரூ.22 லட்சம் விலையில் வர இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில்தான் இந்த புதிய செடான் கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஸ்போர்ட்ஸ் லைன், மாடர்ன் லைன் மற்றும் லக்சுரி லைன் என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் மாடலிலும் கிடைக்கும். இதில், 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடல் 320ஐ மற்றும் 328ஐ என இரண்டு சக்தி கொண்ட மாடலில் கிடைக்கும். 320ஐ மாடல் 184 பிஎஸ் பவரையும், 328ஐ 245பிஎஸ் பவரை வெளிப்படு்த்தும்.

இதேபோன்று, டீசல் மாடலும் 320டி மற்றும் 330டி என இரண்டு ஆற்றலை வெளிப்படுத்தும் மாடல்களில் கிடைக்கும். இதில், 320டி மாடல் 184பிஎஸ் பவரையும், 330டி மாடல் 262 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 5 சீரிஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் இசட்எப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ்தான் 3 சீரிஸ் காரிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் பென்ஸ் சி கிளாஸ், ஆடி ஏ4, நிசான் டீனா மற்றும் வால்வோ எஸ்60 கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும். மேலும், பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட் செல்லும் வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஈர்க்கும் என கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2012, 14:06 [IST]
English summary
German premium carmaker BMW will launch the highly awaited new 3-series (F30) sedan by the end of July. The 2012 3-series which will be assembled locally at the carmaker's Chennai plant is expected to be priced around Rs 22 lakhs for the base model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+