1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் வரும் ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் கார்!

Fiesta Hatchback
ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் கார் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் வர இருக்கிறது.

ஃபியஸ்ட்டா செடான் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகப்படுத்த ஃபோர்டு ஆயத்தமாகி வருகிறது. தற்போது ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் காரின் சோதனை ஓட்டங்களையும் ஃபோர்டு இந்தியா மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் அட்டகாசமான வடிவமைப்புடன், ஏராளமான வசதிகளையும் கொண்டிருக்கிறது. எல்இடி ஹெட்லைட், ஃபோர்டு நிறுவனத்தின் பிரத்யேக இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அதிகபட்ச வேகத்தை நிர்ணயிப்பது, புதிதாக கார் கற்றுக்கொள்ளும் உரிமையாளர்களுக்கான சிறப்பு வசதிகள் என புதிய அம்சங்களை தாங்கி வர இருக்கிறது.

இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பம் கொண்ட 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்தான் ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜ், நிறைந்த பவர், குறைந்த கார்பன் புகை வெளியீடு ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயலாற்றும் எஞ்சின்தான் ஈக்கோபூஸ்ட்.

இந்தியாவில் ஃபோர்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியிலும் இந்த புதிய எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலில் 182 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ-20 மற்றும் ஃபியட் கிராண்ட் புன்ட்டோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு இந்த கார் நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும். ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் கார் வடிவைமப்பில் ஒரு சில மாற்றங்களுடன் வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.

இந்த புதிய காரை ஃபிகோ மற்றும் ஃபியஸ்ட்டா செடான் காருக்கு இடைப்பட்ட செக்மென்ட்டில் நிலை நிறுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, September 6, 2012, 16:53 [IST]
English summary
Ford has revealed of its 2013 Fiesta Hatchback details today. The new fiesta hatch will be equipped with 1.0-litre EcoBoost engine.
மேலும்... #ford #fiesta #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+