'எப்' டைப் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தும் டாடா ஜாகுவார்

டாடா மோட்டார்ஸ் கீழ் வந்தபின் இந்த புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் காரை ஜாகுவார் தயாரித்துள்ளது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் தனது நிறுவனத்தின் மதிப்பை வெகுவாக உயர்த்தும் என்று ஜாகுவார் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாகுவார் நிறுவனத்தின் உயரதிகாரி அட்ரியன் ஹால்மார்க் கூறுகையில், " பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமாக இருக்கும் எப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் ஜாகுவாரின் பிராண்டை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும்.
மேலும், இந்த கார் அறிமுகமாகும் 27ந் தேதி ஜாகுவார் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்," என்று கூறினார்.
இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் மூன்று விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதில், 340 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஜாகுவாரின் புதிய 3.0 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் ஏற்கனவே கைவசம் இருக்கும் 380பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் ஆகியவை இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு உயிர் கொடுக்கும்.
இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த காரின் இறுதிகட்ட சோதனைகளில் ஜாகுவார் வடிவமைப்பு எஞ்சினியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது முடிந்தவுடன் விரைவி்ல் இந்த கார் உற்பத்தி நிலையை எட்டும்.


Click it and Unblock the Notifications








